கனடாவில் உணவு வங்கிகளின் உதவியை நாடுவோர் எண்ணிக்கை முன்னரை விட அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கனடாவில் வாழும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உணவு வங்கிகள் தடுமாறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 மில்லியன் கனேடியர்கள் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. 2021இல் இந்த எண்ணிக்கை 5.8 மில்லியனாக இருந்துள்ளது.
அத்துடன், சுமார் 2.5 மில்லியன் குழந்தைகள் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.