இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் இருவர், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
யூத அருங்காட்சியகத்துக்கு வெளியே நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
சம்பவத்தின் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் இருப்பதாக வாஷிங்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர், “பாலஸ்தீனை விடுவியுங்கள்” என்று முழக்கமிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய நாட்டு நிறுவத்துக்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டேனன் அந்தத் தாக்குதல் யூத எதிர்ப்புப் பயங்கரவாதச் செயல் என்று குறிப்பிட்டார்.
அரசதந்திரிகளையும் யூதச் சமூகத்தையும் தாக்குவது சிவப்புக் கோட்டைத் தாண்டும் செயல் என்று அவர் கூறினார்.