ஈரான் மீது தாக்குதல் நடத்தியமையால் அமெரிக்கா மீதான நம்பிக்கை போய்விட்டதாக சீனா கூறியுள்ளது.
அனைத்துலகப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் ஒரு நாடு என்ற முறையில் அமெரிக்காவின் நம்பகத்தன்மை சரிந்துள்ளதாக சீனாவின் ஐக்கிய நாட்டுத் தூதர் தெரிவித்தார்.
போர் விரிவடைவதைத் தடுக்க இஸ்ரேல் உடனடியாக யுத்தநிறுத்த முயற்சியை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பூசலைப் பெரிதுபடுத்தும் எந்தவொரு திடீர் வன்முறையிலும் இருதரப்பும் ஈடபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவின் நடவடிக்கை அபாயகரமானது, பிரச்சினையைத் தூண்டிவிட்டிருக்கிறது என்று சீன அரசாங்க ஊடக ஆய்வறிக்கைகள் கூறின.
இந்நிலையில், ஈரானிலிருந்த பெரும்பாலான சீனர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஈரானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது. எஞ்சியுள்ள சிலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் சீனத் தூதரகம் தெரிவித்தது.