ஈரானை தாக்கிய பின்விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும் ஈரானிய உயர் தலைவரின் ஆலோசகர் அலி அக்பர் வெலயாடி எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுச்சக்தித் தளங்கள் மீது நேற்றும் (22) அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்க இராணுவத் தளங்கள் தாக்கப்படலாம் என்றும் மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் குறி வைக்கப்படலாம் என்றும் ஈரான் மிரட்டியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்கா எந்தத் தளங்களைக் கொண்டு ஈரானைத் தாக்கியதோ, அதே தளங்கள் தாக்கப்படலாம் என்று அலி அக்பர் வெலயாடி எச்சரித்துள்ளார்.
அதேவேழள, நேற்றைய தாக்குதலுக்குப் பின் ஈரானின் அணுத் திட்டத்தை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும், ஈரானின் அணுசக்தித் தளங்கள் எந்த அளவுக்குச் சேதமடைந்தன என்பது தெரியவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் ஈரானை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரானின் அணுசக்தி, ஏவுகணைத் தளங்களை அழிப்பதே இலக்கு; அது நிறைவேறிய பின் இராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.