இஸ்ரேல் – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
“போர் நிறுத்தம் தொடர்பாகவோ, இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் நாம் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது” என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேல் – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் அழைப்பு!
டிரம்ப்புடனான தொலைபேசி உரையாடலில் ஈரான் தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலும் நிறுத்தும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இஸ்ரேல் – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியிருந்தன.
இதற்குப் பதிலடியாக, கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் நேற்றிரவு தாக்கியது.