எல்லைப் பாதுகாப்பு குறித்து கனடா விழிப்புடன் உள்ளதாக கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் Canada Border Services Agency (CBSA) தெரிவித்துள்ளனர்.
ஈரான் பிரஜைகள் சிலர் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையிலேயே, CBSA மேற்படி தெரிவித்துள்ளது.
ஈரானிய பிரஜைகளின் சட்டவிரோத நுழைவு குறித்து தாம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
அதேவேளை, சந்தேகத்துக்குரிய மூவருக்கு நாடு கடத்தும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
“ஈரான் அரசை ஒரு பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் ஆட்சி” என, 2022ஆம் ஆண்டு கனடா அரசாங்கம் வகைப்படுத்தியுள்ளது.
எனவே, கனடாவுக்குள் நுழைவதற்கான ஈரான் பிரஜைகளின் விசா விண்ணப்பங்களை கனடிய குடியேற்ற, அகதிகள் மற்றும் குடிமக்கள் திணைக்களம் கவனமாக பரிசீலித்து வருகின்றன.