ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிக வெப்பமான காலநிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், பிரான்ஸில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், அதிக வெப்பம் தொடர்பான பிரச்சினைகளுக்காக 300 பேருக்கும் மேல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸில் 1900ஆம் ஆண்டிலேயே அதிக வெப்பம் பதிவாகியது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதமே மிக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி : இலண்டனில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை
ஐரோப்பாவின் பல நாடுகளில் வெப்பம் சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இத்தாலியில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு தொழிற்சங்கம் உறுதிப்படுத்தியது. இதனால் இத்தாலியின் சில வட்டாரங்களில் வெளியே வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.