செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மீது சைபர் தாக்குதல்; 700 ஊழியர்கள் வேலை இழப்பு!

158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மீது சைபர் தாக்குதல்; 700 ஊழியர்கள் வேலை இழப்பு!

1 minutes read

அண்மைக் காலமாக இங்கிலாந்தில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையில், 158 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்தின் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் (KNP Logistics) நிறுவனம் சுமார் 500 லொரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வருகிறது.

இந்நிறுவனமுமம் அண்மையில் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது.

நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது நிறுவனக் கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்தமையால் இந்த துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.

“அகிரா” என்ற சைபர் கும்பல், குறித்த கடவுச்சொல்லை எளிதாக யூகித்து, நிறுவனத்தின் IT நெட்வேக்கின் ஊடுருவியது.

அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் அது முடக்கினர்.

இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது. ஆனால் கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது.

அதனால் 700 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.