செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மத்திய இலண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழப்பு

மத்திய இலண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழப்பு

1 minutes read

திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு சவுத்வார்க்கின் லாங் லேனில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், அங்கு நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்தச் சம்பவத்தில் 58 வயது நபர் சம்பவ இடத்திலேயே இறந்ததுடன், மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்பின்னர் அவர்களில் 27 வயது நபரும் இறந்துவிட்டதுடன், மூன்றாவது நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கிறார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றொரு நபரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

“எங்கள் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, மேலும் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் முழு சூழ்நிலையையும் புரிந்துகொள்ள நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்” என, துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் எம்மா பாண்ட் கூறினார்.

அத்துடன், “இந்தக் கட்டத்தில், இது பயங்கரவாதம் தொடர்பானது என்று நாங்கள் நம்பவில்லை, மேலும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.