செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் அதிகமாக பதிவாகும் நில நடுக்க சம்பவங்கள்!

இங்கிலாந்தில் அதிகமாக பதிவாகும் நில நடுக்க சம்பவங்கள்!

1 minutes read

இங்கிலாந்தில் அண்மைக்காலமாக நில நடுக்க சம்பவங்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மாத்திரம் குறைந்தது 9 நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாண்டில் இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட நில நடுக்க சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் தாம் எச்சரிக்கையாக இருப்பதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை 21ஆம் திகதி, ஷிராப்ஷையரில் உள்ள டாரிங்டன் பகுதியில் 1.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் 9 கிமீ ஆழத்தில் பதிவானது.

அதே நாளில், 21 மணி நேரத்திற்குப் பிறகு, ஆர்கில் மற்றும் புயுட்டியில் உள்ள ஆர்மிடேல் பகுதியில் 0.8 ரிக்டர் அளவிலான சிறிய நில அதிர்வு 3 கி மீ ஆழத்தில் பதிவானது.

பின்னர் ஜூலை 24ஆம் திகதி மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. மீண்டும், கடந்த 1ஆம் திகதி நில நடுக்கம் பதிவானதாக இங்கிலாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆரம்ப காலங்களில் இங்கிலாந்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது அரிதானதாகவே காணப்பட்டது. எனினும், 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் நில நடுக்க சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

பொதுவாக, இங்கிலாந்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறியவை மற்றும் அவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாதவை. ஆனாலும், அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கங்கள் இங்கிலாந்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.