சட்டவிரோத படகுகளை நிறுத்துவதற்கான இங்கிலாந்து – பிரான்ஸின் முன்னோடித் திட்டமான “ஒன்-இன், ஒன்-அவுட்” எதிர்வரும் சில நாட்களில் அமலுக்கு வருகிறது.
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சிறிய படகுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் போது சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்யவும் முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
“ஒன்-இன், ஒன்-அவுட்” ஒப்பந்தம் சிறிய படகுகளில் இங்கிலாந்துக்கு வருபவர்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டு, பிரான்ஸக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.
இதற்கு ஈடாக, பாதுகாப்பு மற்றும் தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றால், பிரான்ஸிலிருந்து சம எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்களை இங்கிலாந்து ஏற்றுக்கொள்ளும்.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து – பிரான்ஸ் ‘One in, one out’ ஒப்பந்தம் வடிவமைப்பு!
இந்தத் திட்டம் “மாதக் கால வளர்ந்த ராஜதந்திரத்தின் விளைவு” என்றும், இது “உண்மையான முடிவுகளை வழங்கும்” என்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் கூறினார்.
ஆனால், “இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது” என்றார்கள் பழமைவாதிகள்.
சர் கீர் மற்றும் பிரான்ஜ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தத்தை அறிவித்தனர். ஆனால், அது இன்னும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் சட்ட ஆய்வுக்கு உட்பட்டது.
“ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், ஜெர்மனி மற்றும் பிற உறுப்பு நாடுகள் இந்த புதுமையான அணுகுமுறைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன” என்று இங்கிலாந்து அரசாங்கம் இப்போது கூறியுள்ளது. அதாவது திட்டத்தைத் தொடரலாம்.