துருக்கியின் வடமேற்கு மாநிலமான பாலிகெசிரில் (Balikesir) பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
அது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்போது 16 கட்டிடங்கள் தரைமட்டமாகின. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 7.53 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 81 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இஸ்தான்புல் வரை உணரப்பட்டுள்ளன.
மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதற்குமுன்னர் 2023ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் வலுவான நிலநடுக்கத்தில் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதேவேளை, பக்கத்து நாடான சிரியாவில் 5,000 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
