பாலஸ்தீன வட்டாரத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கத் தாம் தயார் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத் தனி நாடு உருவாவதை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரமர் அல்பனீசி தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் தொடரும் வன்முறையை நிறுத்துவதற்கு இரு நாடுகளே முறையாக சிறந்த தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.
அதுவரை தற்காலிகமாக மட்டுமே அமைதி நிலவும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி : பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க 15 நாடுகள் கூட்டறிக்கை!
அத்துடன், காஸாவில் நீடிக்கும் பூசலையும் பட்டினியையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அல்பனீசி வலியுறுத்தினார்.
ஏற்கெனவே பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீனத் தனி நாடு உருவாவதை அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.