அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்பை மேற்கொண்டனர்.
உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துத் டிரம்ப் ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்திருந்தார். இது குறித்து இருவரும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளனர். அவர்களது ஆலோசகர்களும் உடனிருந்தனர்.
அதற்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அது சுமார் 10 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது. ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஒப்பந்தத்தை எட்டியிருப்பதாக புட்டின் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்தார். சில விவகாரங்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உச்சநிலை மாநாடு குறித்துத் தாம் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் பேசவிருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.