அமெரிக்கா – நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள ஓர் இரவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்களில் மூவரும் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. காயமடைந்தவர்களில் எட்டு பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அங்கு நடந்த ஒரு சிறிய சண்டை துப்பாக்கிச் சூடாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் 36 தோட்டாக்களையும் ஒரு துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்களை தேடும் பணிகளில் பொலிஸ் ஈடுபட்டுள்ளது.