செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு; பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு; பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

0 minutes read

ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் இன்று (27) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், Dezi Freeman என்ற 56 வயது நபரே, பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என பொலிஸ் அடையாளம் கண்டுள்ளது.

தப்பியோடியுள்ள அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாக விக்டோரியா மாநில பொலிஸ் ஆணையர் கூறினார்.

அதேவேளை, சந்தேகநபரின் குடும்பத்தாருடனும் விசாரணை நடந்துள்ளது. அவர்கள் எந்தவித ஆபத்திலும் இல்லை என்பதை உறுதிசெய்ய அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.