உக்ரைன் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் பருபிய் (வயது 53) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை சபாநாயகராக செயல்பட்டார்.
லிவீவ் மாகாணம் – பிராங்க்ஸ்வி பகுதியில் ஆண்ட்ரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர்.
கொலைகாரர்களை பொலிஸார் தேடி வருகிறார்கள்.
ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.