செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மைக் திடீரென ஒன் ஆனதால் சீன – ரஷ்ய ஜனாதிபதிகளின் உரையாடல் கசிவு!

மைக் திடீரென ஒன் ஆனதால் சீன – ரஷ்ய ஜனாதிபதிகளின் உரையாடல் கசிவு!

1 minutes read

சீனா, ரஷ்யா மற்றும் வட கொரிய ஜனாதிபதிகளின் பெய்ஜிங் சந்திப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் பேசிய தனிப்பட்ட விடயம் கசிந்துள்ளது.

எதிர்பாராத விதமாக மைக் திடீரென ஒன் ஆனதால் இந்த உரையாடல் கசிந்துள்ளது.

அதில் அவர்கள் இருவரும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், இளமையாக இருத்தல் மற்றும் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியுமா உள்ளிட்ட விடயங்கள் குறித்து உரையாடியுள்ளனர்.

உரையாடல்

ஜி ஜின்பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால், இன்று நீங்கள் 70களில் கூட இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.

புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும்.

ஜி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர்.

இவ்வாறே உரையாடிக்கொண்டு இருவருடன் நடந்து சென்ற வேளை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஜி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்” என்று புதின் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.