Apple நிறுவனம் அதன் iPhone 17 ரக அலைபேசிகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தப் புதிய அலைபேசி வெளியிட்டுள்ளது.
இம்முறை புதிதாக iPhone 17 Air அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே Apple நிறுவனத்தின் மிக மெல்லிய அலைபேசியாகும். 0.56 சென்டிமீட்டர் மாத்திரமே அதன் மொத்தம் அகும்.
அதன் battery 24 மணி நேரம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
iPhone 17 அலைபேசியின் விலை கடந்த ஆண்டைப் போலவே 799 டொலரில் ஆரம்பிக்கிறது.
அத்துடன், iPhone 17 Pro அலைபேசியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விலை 1,099 டொலரில் ஆரம்பிக்கிறது.
அமெரிக்க வரிகளால் செலவுகள் அதிகரித்திருந்தாலும் Apple நிறுவனம் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
விலை அறிவிக்கப்பட்ட பின்னர் Apple நிறுவனத்தின் பங்குவிலை 1.4 சதவீதம் சரிந்தது. விலையில் மாற்றமில்லாததால் நிறுவனத்தின் இலாபம் பாதிக்கப்படலாம் என்று முதலீட்டாளர்களிடையே அச்சம் நிலவுகிறது.
இதேவேளை, AirPods Pro 3 மற்றும் Apple Watch Series 11 ஆகிய கருவிகளும் Apple நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.