ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 80ஆவது பொதுச்சபை, எதிர்வரும் வாரம் கூடவிருக்கிறது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கும் நிதியைக் குறைப்பதற்கு அவர் பரிந்துரைத்திருக்கிறார்.
நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்துடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளார்.
பாலஸ்தீனர்களுக்கான நிவாரண அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்திவைத்திருக்கிறார்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை உடன்பாடு ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா விலகப் போவதாகவும் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையிலேயே ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 80ஆவது பொதுச்சபையில் டிரம்ப் உரையாற்றவுள்ளார்.
மேலும், பாலஸ்தீன வட்டாரத்திற்கான அதிபர் மஹ்மூட் அபாஸ், பொதுச்சபையில் கலந்துகொள்ள அமெரிக்கா அவருக்கு விசா வழங்கவில்லை.
அதற்கான காரணமாக பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை முதலியவற்றைக் கருத்தில்கொண்டு விசா நிராகரிக்கப்படலாம் என்று அமெரிக்கா கூறியது.
அதனால் அவர் வீடியோ வழியாகக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன வட்டாரம், தனி நாடு அங்கீகாரம் பெறும் முயற்சிகளை அதிகாரிகள் கைவிடவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.