ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும், இருவரைக் காணவில்லை.
இந்த விபத்தில் கட்டுமான ஊழியர்கள் பலர் காயமடைந்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
தலைநகரின் மத்தியில் இருந்து Plaza Mayor பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது சுற்றுப்பயணிகளிடத்தில் பிரபலமான இடம் என்று கூறப்படுகிறது.
அருகில் இருக்கும் கட்டடங்களுக்கு ஆபத்து இருக்கிறதா என்று அவசர கால ஊழியர்கள் ஆராய்கிறார்கள். அதற்காக அங்கு வசிப்போரை மீட்புப் பணியாளர்கள் வெளியேற்றி உள்ளனர்.
காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இடிந்து விழுந்த கட்டடம் முன்னாள் அலுவலகக் கட்டடம் ஒன்றாகும். அதைச் சுற்றுப்பயணிகள் தங்குவதற்கு ஹோட்டலாக மாற்றியமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த வேளையில், அது திடீரென இடிந்து விழுந்துள்ளது.