ஐ.நா அமைதிப்படை நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய நாட்டு அமைதிப்படை கால்வாசியாக குறைக்கப்படவுள்ளது.
ஐ.நா உலக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சுமார் 13,000 இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, நாடு திரும்ப வேண்டியிருக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
2025-2026ஆம் நிதியாண்டில் அமைதிப்படைக்கு 5.4 பில்லியன் டொலர் தேவைப்படும்.
அமெரிக்கா 1.3 பில்லியன் டொலர் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் பாதிப்பணத்தை மட்டுமே தர முடியும் என்று அமெரிக்கா சொல்லிவிட்டது.
இதனால் 9 இடங்களில் அமைதிப் பணி பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.