செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்த ஒருவர் காலமானார்

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்த ஒருவர் காலமானார்

1 minutes read

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்களில் ஒருவரான கான்சா ஷெர்பா காலமானார்.

அவருக்கு வயது 92ஆகும்.

கான்சா ஷெர்பா அண்மையில் உடல்நலம் குன்றிய நிலையில் காலமாகியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

1953ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக எட்டப்பட்டது.

சிகரத்தை முதலில் எட்டியவர்கள் என்ற பெருமை எட்மண்ட் ஹிலரிக்கும் (Edmund Hillary) டென்ஸிங் நோர்கேக்கும் (Tenzing Norgay) சென்றது.

அவர்களது குழுவில் மொத்தம் 35 பேர் இருந்தனர். அக்குழுவில் 19 வயதே ஆன கான்சா ஷெர்பாவும் இருந்தார்.

அப்போது அவருக்கு மலையேறும் அனுபவம் இருந்ததே இல்லை என்றும் முதல் பயணத்திலேயே 8,000 மீட்டர் உயரத்துக்கும் மேல் ஏறினார் என்றும் BBC குறிப்பிட்டுள்ளது.

அதுவும் மலையேறிகளின் உணவு, கூடாரங்கள் மற்றும் கருவிகள் போன்றவற்றைத் தூக்கிக்கொண்டு, அவ்வாறு கான்சா ஷெர்பா மேலும் 20 ஆண்டுகள் இமய மலை வட்டாரத்தில் மலையேறி வழிகாட்டியாக வேலை செய்தார்.

அவர் ஒரு சாதனையாளர் என்றும் சிறந்த முன்மாதிரி என்றும் சக மலையேறி வழிகாட்டிகள் மெச்சியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.