இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், அவரது தம்பி ஆண்ட்ருவின் இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.
இது குறித்து அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ரூ, இனி கிழக்கு இங்கிலாந்தில் தனிப்பட்ட வீட்டில் தங்குவார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரு மறுக்கும் நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதாக அரண்மனை தெரிவித்தது.
65 வயதுடைய ஆண்ட்ரூ, மறைந்த எலிசபெத் ராணியின் இரண்டாவது மகன் ஆவார்.
தொடர்புடைய செய்தி : பட்டங்கள், பதவிகளை கைவிட்டார் இளவரசர் ஆண்ட்ரூ : “மகிழ்ச்சி” என்றார் மன்னர் சார்லஸ்!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெயினுடன் அவருக்கு இருந்த தொடர்புகளால் ஆண்ட்ரூ மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி நெருக்குதல் வந்தமையால் மேற்படி நிலைமை ஏற்பட்டுள்ளது.