Bubble tea இல் உள்ள உருண்டை மூச்சுக் குழாயில் சிக்கியதில் 3 வயது சிறுவன் மரணித்துள்ளான்.
2 வாரங்களுக்கு முன்பு சீனாவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிறுவனின் பெற்றோர், அவனுக்குப் பானத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பின்னர் கடைத்தொகுதியில் இருந்த விளையாட்டுத் தலத்தில் சிறுவன் விளையாடியுள்ளான். அதைக் காட்டும் CCTV கமெரா காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறுவன், Bubble teaயை குடித்துவிட்டு, டிராம்போலைனில் (trampoline) குதித்தது விளையாடுவது தெரிகிறது.
அப்போது பானத்தில் சேர்க்கப்படும் உருண்டை (pearl) சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியது. அதன் அளவு 10 மில்லிமீட்டர் ஆகும்.
நினைவின்றி விழுந்த சிறுவனை, எழுப்ப அவனது தாய் முயற்சி செய்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறுவனுக்கு அவசர சிகிச்சை பயனளிக்கவில்லை. சிறுவன் மரணித்ததாக உறுதியானது.
பானத்தை விற்ற கடையும் அந்தக் கடைத்தொகுதியும் சிறுவனின் மரணத்திற்குப் பொறுப்பேற்கவேண்டும் என சிறுவனின் பெற்றோர் கூறுகின்றனர்.
அது சிறுவர்களுக்கு உகந்த பானம் அல்ல என்று கடையில் எந்தவித அறிவிப்பும் இல்லை என்றும் கடைத்தொகுதியில் சிறுவனுக்கு உரிய முதல் உதவி கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் மேலும் கூறுகின்றனர்.