செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!

0 minutes read

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

வென்னப்புவ–லுணுவில பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர், ஜின் கங்கையில் மோதி விபத்துக்குள்ளானது.

அவசரமாக தரையிறக்க முற்பட்டபோதே விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் இருந்த விமானப்படை வீரர்கள் இருவர் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் மூவர் என ஐந்து பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என விமானப் படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்களை மீட்கும் பணிகளில் இலங்கை விமானப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானப்படை தளங்களை சேர்ந்த விசேட மீட்புக் குழுவினர் இந்த நடவடிக்கைகளுக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.