செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடைக்கு ஸ்பெயின் அரசு திட்டம்

16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடைக்கு ஸ்பெயின் அரசு திட்டம்

0 minutes read

ஸ்பெயினில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் ( Pedro Sanchez) அறிவித்துள்ளார். இந்த சட்டமூலத்திற்கான மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்களில் பரவும் வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம் மற்றும் தவறான தகவல்களின் பாதிப்புகளிலிருந்து இளையவர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிற ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோத உள்ளடக்கங்கள் பரவுவதற்கு சமூக ஊடக நிறுவன நிர்வாகிகளை பொறுப்பேற்க வைக்கும் விதமாகவும், அல்காரிதம் ( algorithm) தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைக் குற்றமாக்கும் வகையிலும், வலுவான வயது சரிபார்ப்பு முறைகளை கட்டாயமாக்கும் வகையிலும் புதிய சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.