செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஜப்பான் தேர்தல்: சனாயே தக்காய்ச்சிக்கு டிரம்ப் ஆதரவு; வலிமையான தலைவர் என புகழாரம்!

ஜப்பான் தேர்தல்: சனாயே தக்காய்ச்சிக்கு டிரம்ப் ஆதரவு; வலிமையான தலைவர் என புகழாரம்!

0 minutes read

ஜப்பானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், ஜப்பானிய பிரதமர் சனாயே தக்காய்ச்சிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு வருமாறு தக்காய்ச்சிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தக்காய்ச்சி திறமையான மற்றும் வலிமையான தலைவராக இருப்பதாக அவர் பாராட்டியதுடன், அவருக்கு முழு ஆதரவு வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தக்காய்ச்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறக்கூடும் என கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது தக்காய்ச்சியின் ஆளும் கூட்டணி கீழவையில் மட்டுமே பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஆனால், மேலவையில் அந்தக் கூட்டணிக்கு போதுமான செல்வாக்கு இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.