செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டனில் பல தசாப்தங்களாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது 33 வழக்குகள் பதிவு

இலண்டனில் பல தசாப்தங்களாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது 33 வழக்குகள் பதிவு

0 minutes read

தெற்கு இலண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டதாக நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கென்ட் (Kent), டெர்ட்ஃபோர்ட் (Dartford) பகுதியைச் சேர்ந்த 58 வயதான அடேபாயோ அடேயெமி (Adebayo Adeyemi) என்பவர் மீது மொத்தம் 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்கள் 2003 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஆறு கற்பழிப்பு வழக்குகள், ஒரு கற்பழிப்பு முயற்சி, ஒரு தாக்குதல், 21 பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் நான்கு அநாகரீகமான தாக்குதல்கள் ஆகியவை அடங்கும் என மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் பெண்கள் ஆவர்.

அடேயெமி முதன்முதலில் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.

அவர் நாளை திங்கட்கிழமை (09) ப்ரோம்லி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Bromley) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.