செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில் BNP பெரும்பான்மை: தாரிக் ரஹ்மான் உள்ளிட்டோர் பதவியேற்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில் BNP பெரும்பான்மை: தாரிக் ரஹ்மான் உள்ளிட்டோர் பதவியேற்பு

0 minutes read

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (17) காலை அதிகாரபூர்வமாக பதவியேற்றனர்.

தலைநகரில் அமைந்துள்ள பங்களாதேஷ் தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் பதவியேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி – பங்களாதேஷ் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு: ஜமாத் இ-இஸ்லாமி கட்சி எதிர்ப்பு

இதனுடன், தேர்தலில் வெற்றி பெற்ற சுயாதீன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இன்று தங்களது பதவிகளை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் 297 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றி BNP கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.