செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் கடுமையான இணைய சட்டம்: 48 மணி நேரத்தில் ஆபாசப் படங்களை நீக்குவது கட்டாயம்

இங்கிலாந்தில் கடுமையான இணைய சட்டம்: 48 மணி நேரத்தில் ஆபாசப் படங்களை நீக்குவது கட்டாயம்

1 minutes read

இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) சமுக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான சமூக வலைதள வன்முறைகளை குறைக்கும் நோக்கில், இந்த சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு நபர் தனது அனுமதி இல்லாமல் நெருக்கமான அல்லது ஆபாசமான படங்கள் பகிரப்பட்டதாக புகார் அளித்தால், அந்த இணையதளம் 48 மணி நேரத்திற்குள் அந்தப் படங்களை நீக்க வேண்டும் என்பது சட்டபூர்வமாக கட்டாயமாகும்.

இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு உலகளாவிய வருவாயின் 10% வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக விதிகளை மீறும் தளங்கள் இங்கிலாந்தில் செயல்பட தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் மற்றும் டீப்ஃபேக் படங்களும் இந்தச் சட்டத்தின் வரம்பில் வருகின்றன. இது தற்போது நிலவும் Online Safety Act வலைதள பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாக கொண்டு வரப்படுகிறது. முன்னதாக, இப்படிகள் நீக்க பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தொழில்நுட்பத் துறைச் செயலர் Lies Kendall கூறியதாவது, “தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை காலம் முடிந்துவிட்டது.” என்றார்.

இதற்கு ஒப்பாக, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules) இல் மாற்றம் கொண்டு, இத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க 3 மணி நேரத்திற்குள் கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய சட்டம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான பொறுப்பு விதித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.