செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து உரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பால் ரத்து!

நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து உரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பால் ரத்து!

0 minutes read

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இங்கிலாந்தில் ஆற்றவிருந்த உரை புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பின் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

இம்மாத இறுதியில், அவருக்கு ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனில் (Cambridge Union) உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகங்கள் போர்க்கொடி தூக்கி, நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தின. இதனால், நாமல் ராஜபக்சின் உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நாமல் ராஜபக்ஷவின் தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை என கொழும்பு ஆங்கில இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.