செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் நிதி ஆலோசனைகளுக்காக AI தளங்களை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இங்கிலாந்தில் நிதி ஆலோசனைகளுக்காக AI தளங்களை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 minutes read

இங்கிலாந்தில் வாழும் மக்களில் சுமார் 40 சதவீதமானோர், தங்களின் தனிப்பட்ட நிதி தொடர்பான ஆலோசனைகளுக்காக ChatGPT, Gemini, Co-Pilot போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) தளங்களைப் பயன்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனித நிதி ஆலோசகர்களின் சேவைகள் அதிக செலவானதாக இருப்பதால், பலர் கட்டுப்பாடுகள் குறைந்த AI வழிகாட்டுதல்களை நோக்கி திரும்பியுள்ளதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

எனினும், AI மூலம் வழங்கப்படும் நிதி தொடர்பான தகவல்கள் சில நேரங்களில் தவறாகவோ அல்லது நுகர்வோரின் தனிப்பட்ட சூழ்நிலைக்கு பொருந்தாதவையாகவோ இருக்கக்கூடும் என முதலீடு மற்றும் சேமிப்புக் கூட்டணியின் கொள்கைத் தலைவர் சோஃபி லெக்ராண்ட்-கிரீன் எச்சரித்துள்ளார். இவ்வகை வழிகாட்டுதல்களை முழுமையாக நம்புவது எதிர்பாராத நிதி ஆபத்துகளை உருவாக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கெடுப்பு தகவல்களின் படி, 18 முதல் 28 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களில் 65 சதவீதமானோரும், 29 முதல் 44 வயதுக்கிடைப்பட்டவர்களில் 61 சதவீதமானோரும் கடந்த ஆண்டு தனிப்பட்ட நிதி ஆலோசனைகளுக்காக AI தளங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறைந்த சொத்துகள் கொண்ட வாடிக்கையாளர்களை ஏற்கும் மனித நிதி ஆலோசகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.