பஹ்ரேனில் அமைந்துள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை முழுமையாக அழித்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானின் அரசு தொடர்புடைய Fars News Agency வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட வீடியோவில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் தூரத்தில் வெடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், அமெரிக்கத் தளபதி நிலையம் மற்றும் படையினர் தங்கியிருந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டதாகவும், அங்கிருந்த எரிபொருள் கலன்கள் வெடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து இதுவரை அமெரிக்கா எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை.
இந்நிலையில், பஹ்ரேனிலுள்ள அமெரிக்க விமானப் படைத்தளப் பகுதியில் புகைமூட்டம் காணப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களால், பஹ்ரேன் நாட்டில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு, அமெரிக்க வெளியுறவு அமைச்சு அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.