ஹோர்முஸ் நீரிணை தற்போது திறந்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இந்த யுத்த நிறுத்தம் 10 நாட்கள் அமலில் இருக்கும் என்றும், அந்த காலப்பகுதியில் அனைத்து வர்த்தகக் கப்பல்களும் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதை அவர் X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டு, ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால், ஈரானின் துறைமுகங்களை நோக்கிச் செல்லும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்க முற்றுகை தொடரும் என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை அது நீடிக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரான், முற்றுகை தொடர்ந்தால் தக்க பதிலடி நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.