செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஈரான் கப்பலை சிறைபிடித்தமைக்காக அமெரிக்க இராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஈரான் கப்பலை சிறைபிடித்தமைக்காக அமெரிக்க இராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

0 minutes read

ஓமான் வளைகுடாவில் அமெரிக்க இராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் சரக்குக் கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியதற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

மேற்படி தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், பாரிய தேசங்கள் ஏற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

முன்னதாக ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றின.

இந்தச் செயலை ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவம் என்று ஈரான் விமர்சித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ஏற்கெனவே எச்சரித்தது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதிபேச்சு நடைபெறவுள்ள நிலையில் இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.