செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரி வழக்கு

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரி வழக்கு

1 minutes read

திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய  18 ஏக்கர் 01 ரூட். 29 பேச்சஸ்,  கணிதுண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் 02 ரூட் 01 பேர்ச்சஸ்  காணித்துண்டும் , மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய  காணி துண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை என வெளிப்படுத்தவும்  அவற்றுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை   திருக்கோணேஸ்வஸ்ர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரியும் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலமையிலான திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபயினரால் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர்  , தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக  கடந்த 29 ம் திகதி சித்திரை மாதம் 2026 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

1950 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும்  இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.