செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வாடகை காரில் போதைப்பொருளை கடத்திய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை; தீவுக்குள் நுழையவும் தடை!

வாடகை காரில் போதைப்பொருளை கடத்திய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை; தீவுக்குள் நுழையவும் தடை!

1 minutes read

ஐல் ஆஃப் மேனுக்கு (Isle of Man) வாடகை காரில் சுமார் £49,000 மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற நைஜல் முல்லன் (Nigel Mullan) என்ற 48 வயது நபருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், ஹெயஷாமிலிருந்து (Heysham) படகு மூலம் டக்ளஸில் (Douglas) உள்ள கடல் முனையத்திற்கு முல்லன் வந்து சேர்ந்தார்.

சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, தான் கிளாஸ்கோவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தொழில் நிமித்தமாகத் தீவிற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், அந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலைக்கப்பட்டுவிட்டது என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவர் ஓட்டி காரை, மோப்ப நாய் உதவியுடன் பொலிஸார் சோதனை செய்தனர். இதில், முன் பக்கப் பயணியர் கதவின் உட்புறப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் சந்தை மதிப்பு £49,240 ஆகும்.

முல்லன் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாலும், பின்னர் போதைப்பொருள் இறக்குமதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது பயணத்தை உண்மையானதாகக் காட்டுவதற்காக, ஒரு பெண்ணிற்கு £250 பணம் கொடுத்து தன்னுடன் அவர் அழைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

டக்ளஸ் நீதிமன்றம் முல்லனுக்கு 7 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஐல் ஆஃப் மேன் தீவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.