செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தொடர்ச்சியாக அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர்: புதிய வரலாறு படைத்த மோடி!

தொடர்ச்சியாக அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர்: புதிய வரலாறு படைத்த மோடி!

1 minutes read

இந்திய அரசியல் வரலாற்றில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து அதிக நாட்கள் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அதன் பின்னர் நடைபெற்ற 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியை வழிநடத்தி வருகிறார். இதன்மூலம் அவர் இன்று வரை மொத்தம் 4,399 நாட்கள் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.

இந்த சாதனையின் மூலம், தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தலைவராக அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வளர்ச்சியிலும், தேசிய அளவிலான அரசியல் மேலாதிக்கத்திலும் மோடியின் தலைமையே முக்கிய பங்காற்றியதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

மோடியின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நட்புறவுகள் மேலும் வலுப்பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி, இரண்டு தனித்தனி காலகட்டங்களில் மொத்தமாக சுமார் 16 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்திருந்தார். எனினும், தொடர்ச்சியாக அதிக நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவி வகித்த சாதனையில் தற்போது நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.