செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பிறந்த 30 மணித்தியாலங்களில் குழந்தைக்கு நடந்த விபரீதம்….

பிறந்த 30 மணித்தியாலங்களில் குழந்தைக்கு நடந்த விபரீதம்….

0 minutes read

சீனாவின் வுஹான் நகரில் பிறந்து 30 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிசுவொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வுஹான் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி சிசு பிறந்துள்ளதுடன் பிரசவத்திற்கு முன்னர் சிசுவின் தாயார் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.

எனினும் சிசுவுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லை.

சிசு தற்போது கண்காணிப்பில் உள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு 675 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

வைரஸ் பரவல் தொடர்பான ஆரம்பநிலை மற்றும் பதில் நடவடிக்கைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்தத் தொகை தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.