செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 86 பேர் பலி.

விமானம் விழுந்து நொறுங்கியதில் 86 பேர் பலி.

0 minutes read

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் (pia) நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-320 ரக (The PIA Airbus A320) விமானம் 85 பயணிகள், 9 சிப்பந்திகள் ஆகிய 99 பேருடன் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்றது. கராச்சியிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடம் இருக்கையில், அங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென விமானம் விழுந்து நொறுங்கியது.

முதற்கட்ட விசாரணையில், லேண்டிங் கியரில் கோளாறு என விமானி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.