டிசம்பரில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி | விலை நிர்ணயிக்கும் சீனா

தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வருகிற டிசம்பரில் விற்பனைக்கு வரலாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியை உருவாக்கி வரும் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தலைவரான லியு ஷிங்ஷென் கூறுகையில்,

கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதத்தில் சந்தைக்கு வரலாம், ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான தடுப்பூசியின் விலை 1,000 யுவான்களாக இருக்கும்.

முதலில் மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்