வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின்
குழு ஜெனிவா சென்றுள்ள நிலையில் அங்கு காணாமல் போனோரின் புகைப்படங்களை ஏந்தியவாறு நீதி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனிவா சென்றுள்ள அவர்கள், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆரம்பித்த போராட்டம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியுடன் 500 நாட்களை எட்டவுள்ளது.
இதனை முன்னிட்டு, சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த உறவுகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வடக்கு,
கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினர், எதிர்வரும் முதலாம் திகதி மக்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
