செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!

1 minutes read

மும்பை: போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கானை அக்டோபர் 11 வரை விசாரிக்க வேண்டும் என்ற என்.சி.பி.யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆர்யன்கான் ஜாமீன் மனு குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பதிலளிக்கவும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்ட்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ஒருசொகுசு கப்பல் ஒன்றில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பயணிகள் போல படகில் ஏறி அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.