ஆசியாவில் பதிவாகும் நிலநடுக்கங்கள் | அதிகாலை இந்தியாவிலும் உணரப்பட்டது

இன்று அதிகாலை 4 .04 மணிக்கு மஹாராஷ்டிராவில் நாசிக் நகரத்திற்கு 89km வடக்கே தரை மட்டத்திலிருந்து 5km ஆழத்தில் 3.6 ரிச்சட் அளவிலான மிக சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது என இந்திய தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம் இது 4வது ஆசிய நிலநடுக்கங்களில் ஒன்றாக உள்ளது கடந்த 09 /11 /2022 நேபாளத்தில் 6.3 ரிச்சட் அளவு நிலநடுக்கமும்;அந்தமான் நிக்கோபா தீவில் 4 .3அளவிலான நிலநடுக்கம்தொடர்ச்சியாக கடந்த 10 /11 /2022 ஆம் திகதியும்; இந்தோனேசியாவில் 21 /11 /2022 அன்று 5 .6 அளவிலான மிக பலமான நிலநடுக்கமும் பதிவாகி உள்ளது.

இந்தோனேசியாவின் நிலநடுக்கம் மேற்கு சாவகம் (ஜாவா) சியாஞ்சூரில் ஏற்பட்டது இதில் அதிகமாக பாதிக்கப்பட்டதும் இந்த பகுதியே ஆகும்.
இந்தோனேசியாவே நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நாடாகும் இதற்கு காரணம் அது நெருப்பு வளையத்தில் அமைவிடத்தை கொண்டுள்ளது

2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவை ஏற்பட்ட நிலநடுக்கம் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகவும் சுனாமியையும் தருவித்து இதனால் 2.3 லட்சம் பேர் பலியானதும் நாம் இவ்விடத்தில் பதிவு செய்ய வேண்டும் மேலும் நேரு முதல் நாள் ஏற்பட்ட பூகம்பத்தில் 162 பேர் பலியானதுடன் 700 மேற்பட்டவர் காயமடைந்துள்ள நிலையில் இதில் 2200 வீடுகள் அழிவடைந்துள்ளமையும் தெரிய வருகிறது.

இதை விட சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆசிரியர்