June 7, 2023 7:48 am

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும்  தெரிவித்தார்.

இந்த நிலையில் புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்