செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கிணற்று நீரை குடித்த 93 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிணற்று நீரை குடித்த 93 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0 minutes read

இந்தியாவின் மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் குடி நீர் அருந்திய 93 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

நந்தட் மாவட்டத்தில் முகுவான்தாண்டா என்ற கிராமத்தில் சுமார் 500 பேர் வசிக்கின்றனர்.

அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து வந்த நீரை அப்பகுதியினர் பருகி வந்தனர்.

இந்தநிலையில் பலர் திடீரென வயிற்றுவலி, வாந்திபேதி என பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 93 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே கிராமத்தில் பலர் பாதிக்கப்பட்டதால் சுகாதார துறையினர் அங்கு மாற்று குடிநீரை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.