செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா “118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று விஜய் சாதனை ; கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று விஜய் சாதனை ; கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்

1 minutes read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 118 என்கிற பெரும்பான்மையை எட்டிவிட்டதைத் தொடர்ந்து மற்றுமொரு கட்சியான ஐ.யூ.எம்.எல் கட்சியும் ஆதரவளித்த நிலையில், தற்போது 120 பெரும்பான்மை பலத்தோடு த.வெ.க சாதனை படைத்துள்ளதை த.வெ.க தலைவர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட விஜய்காந்த், தனது முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளைப் பெற்று திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பதோடு, நீண்ட போராட்டத்துக்கு பின் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறார் என பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்னார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கினை அடைய பெரும் முயற்சி எடுத்தமை முடிவில் கைகொடுத்திருப்பதாக கட்சித் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று திருமாவளவனை சந்தித்த த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவிடம் நிபந்தனையற்ற ஆதரவுக் கடிதத்தை,  திருமாவளவனிடம் பெற்றுக்கொண்டார்.

திருமாவளவனின் ஆதரவோடு 118 பெரும்பான்மை பெற்ற த.வெ.கவுக்கு, சற்றும் எதிர்பாராத வகையில், ஐ.யூ.எம்.எல்  கட்சி ஆதரவளித்து, அதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், 118ஐ கடந்து 120 என்ற இலக்கத்தை த.வெ.க அடைந்து, பெரும்பான்மையோடு தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.