செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு

இலண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு

0 minutes read

இலண்டனில் யூத சமூகத்தை குறித்த இடங்களையும் நபர்களையும் உளவு பார்த்ததாக இரண்டு ஈரானியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை பிரிட்டிஷ்-ஈரானிய குடியுரிமையாளர் நெமடோல்லா ஷாஹ்சவானி, 40 மற்றும் அலிரேஜா ஃபாரசாட்டி, 22 ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

2025 ஜூலை 9 முதல் 2025 ஆகஸ்ட் 15 வரை நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில். இலண்டனில் யூத சமூகத்தை சேர்ந்த இடங்கள் மற்றும் நபர்களின் கண்காணிப்பு தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வியாழக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

விசாரணையின் போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.