எதிர்வரும் 14ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை ஒக்ரோபர் 16ஆம் நாள் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதற்கு அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தின.
அதனால் முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அதனைக் கூட்டும் அறிவிப்பை வெளியிட்டார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
